'இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்ய வீரர்கள் பலர் மரணம்'

'இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்ய வீரர்கள் பலர் மரணம்'

2 mins read
e430435e-5053-47cd-8c4c-e7e02559f658
கியவ்: ரஷ்­யப் படை­க­ளுக்­குக் கடந்த 24 மணி நேரத்­தில் மிகக் கடு­மை­யான பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தாக உக்­ரேன் தெரி­வித்­துள்­ளது. இதுவரை இல்­லாத அள­வுக்கு ரஷ்ய ராணுவ வீரர்­கள் பலர் மாண்­ட­தாக அது கூறி­யது. படம்: ஏஎஃப்பி -

கியவ்: ரஷ்­யப் படை­க­ளுக்­குக் கடந்த 24 மணி நேரத்­தில் மிகக் கடு­மை­யான பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தாக உக்­ரேன் தெரி­வித்­துள்­ளது. இதுவரை இல்­லாத அள­வுக்கு ரஷ்ய ராணுவ வீரர்­கள் பலர் மாண்­ட­தாக அது கூறி­யது.

புது வியூ­கம் வகுத்து, மேலும் பல ராணுவ வீரர்­க­ளைப் போருக்கு ரஷ்யா அனுப்­பி­யி­ருக்­கும் நிலை­யில், எதிர்­பா­ராத வித­மாக அதற்­குப் பெரும் உயிர்ச் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக உக்­ரே­னிய ராணு­வம் தெரி­வித்­தது. உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் ரஷ்யா தாக்குதலைத் தீவி­ரப்­

ப­டுத்­தி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. நேற்று முன்­தி­ன இர­வில் மட்­டும் ஆயி­ரக்­க­ணக்­கான ரஷ்ய வீரர்­கள் மடிந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த இரண்டு நாள்­களில் தனது படை­கள் 25 ரஷ்ய கவச வாக­னங்­களை அழித்­த­தாக உக்­ரே­னிய ராணு­வம் கூறி­யது.

உக்­ரேன் வெளி­யிட்ட தர­வு­

க­ளைச் செய்தி நிறு­வ­னங்­க­ளால் உறு­திப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், உக்­ரேன் தெரி­விப்­பது உண்­மை­யல்ல என்று ரஷ்யா அடித்­துக் கூறு­கிறது.

தனது படை­க­ளுக்­குப்

பேரி­ழப்பு ஏற்­ப­ட­வில்லை என்று ரஷ்யா தெரி­வித்­தது. அதே சம­யத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான உக்­ரே­னிய ராணுவ வீரர்­க­ளைக் கொன்­று­விட்­ட­தாக அது தக­வல் வெளி­யிட்­டது. உக்­ரே­னி­லும் ரஷ்­யா­வி­லும் பனிக்­கா­லம் நில­வு­ வ­தால் எதி­ரி­க­ளின் தாக்­கு­தல்­களை மட்­டு­மன்றி கடுங்­கு­ளிர், பனிப்­பொ­ழிவு ஆகி­ய­வற்­றை­யும் இரு­த­ரப்பு ராணுவ வீரர்­கள் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கிறது. உக்­ரேனை எப்­ப­டி­யா­வது கைப்­பற்­றி­விட வேண்­டும் என ரஷ்யா தாக்­கு­தல்­களை நடத்தி வரும் நிலை­யில், எது நடந்­தா­லும் விட்­டுக்­கொ­டுக்­கப் போவ­தில்லை என்ற பிடி­வா­தத்­து­டன் உக்­ரே­னிய ராணு­வம் தனது நாட்­டைத் தற்­காத்து வரு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, அமெ­ரிக்­கா­வும் மேற்­கத்­திய நாடு­களும் அனுப்­பி­வைத்­துள்ள ஆயு­தங்­களும் கவச வாக­னங்­களும் இன்­னும் சில நாள்­களில் உக்­ரே­னைச் சென்­ற­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அவற்­றைப் பெற்­ற­வு­டன் ரஷ்­யா­வுக்­குப் பதி­லடி கொடுக்க உக்­ரே­னிய படை­கள் காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்யா தொடர்ந்து பல தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கிறது. இருப்­பி­னும், உக்­ரே­னின் முக்­கிய நக­ரங்­களைக் கைப்­பற்ற முடி­யாததால் அதன் ராணுவத்துக்கு விரக்தி ஏற்பட்டு பொறுமை இழந்து வருவதாக அறியப்படுகிறது.