பேங்காக்: தாய்லாந்தில் உள்ள கிராமப் பகுதியில் 19 மாதப் பெண் குழந்தை கிணற்றில் விழுந்தது. 13 மீட்டர் ஆழமுள்ள அந்தக் கிணற்றிலிருந்து அக்குழந்தையை உயிருடன் மீட்க மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் போராடினர்.
ஒருவழியாக அந்தக் குழந்தையை மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றி விட்டதாக தாய்லாந்து ஊடகம் தெரிவித்தது. மீட்புப் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

