வேலை செய்து உயிரிழந்தவருக்கு நிறுவனம் தரவுள்ள இழப்பீடு

வேலை செய்து உயிரிழந்தவருக்கு நிறுவனம் தரவுள்ள இழப்பீடு

1 mins read
27159371-2183-44b4-9dba-c002ea068b24
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் வேலை பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது தனது மேசை­யி­லேயே ஊழி­யர் ஒரு­வர் மர­ண­ம­டைந்­தார். ஊழி­ய­ரின் குடும்­பத்­தா­ருக்கு அவ­ரின் நிறு­வ­னம் இழப்­பீடு வழங்­க­வுள்ளது.

செய்­தி­யா­ள­ரான சாரா­வுட் ஸ்ரீசா­வாட் கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று வேலை­யி­டத்­தில் தனது மேசை­யில் மயங்­கிப் போனார். அவர் டிஎன்­என் எனும் தாய்­லாந்­தின் செய்தி நிறு­வ­னம் ஒன்­றில் பணிபுரிந்தார். 44 வயது திரு சாரா­வுட் அந்­நி­று­வ­னத்­தின் நிகழ்ச்­சி­கள் பிரி­வில் மூத்த நிர்­வா­கி­யா­கப் பொறுப்பு வகித்­து­வந்­ததாகத் தெரி­விக்­கப்­பட்­டது. டிஎன்­என், தாய்­லாந்­தின் மாபெ­ரும் தொடர்பு, தக­வல் நிறு­வ­ன­மான ட்ரூ கார்ப்­ப­ரே­ஷ­னின் துணை நிறு­வ­னம்.

திரு சாரா­வுட் வாரந்­தோ­றும் ஏழு நாள்­களும் அடிக்­கடி கூடு­தல் நேரம் வேலை பார்த்து வந்­தார் என்று தாய்­லாந்­தின் பிபி­எஸ் வோர்ல்ட் ஊட­கம் தெரி­வித்­தது. சில வேளை­களில் அவ­ருக்­குப் பதி­லாக வேலை செய்ய யாரும் இருந்­த­தில்லை என்­றும் குறிப்­பிடப்­பட்­டது.

மார­டைப்­பால் மாண்ட திரு சாரா­வுட்டின் மர­ணம் குறித்து தாய்­லாந்து அர­சாங்­கம் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

வேலைப்­பளு கார­ண­மாக அவர் மாண்­டது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டால் இறு­திச் சடங்­கிற்­கென குடும்பத்தாருக்கு 50,000 பாட் (2,000 வெள்ளி) சலுகை வழங்கப்­படும். மேலும், 10 ஆண்­டு­க­ளுக்கு அவ­ரின் மாதச் சம்­ப­ளத்­தில் 70 விழுக்­காட்­டுத் தொகை­யும் குடும்­பத்­துக்கு அளிக்­கப்­படும்.