ஜிண்டேய்ரிஸ் (சிரியா): வட சிரியாவில் இடிபாடுகளில் பிறந்து சிக்கியிருந்த குழந்தை மீட்கப்பட்டிருக்கிறார். குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்தது.
தாய் உட்பட இக்குழந்தையின் நெருங்கிய உறவினர்கள் உயிர் பிழைக்கவில்லை. இதர உறவினர்கள் குழந்தையை உயிருடன் மீட்டனர்.
தமாஸ்கஸ்: சிரியாவில் ஏழு வயது சிறுமி ஒருவர் குழந்தையான தனது தம்பியை அரவணைத்து ஆறுதல் தரும் காட்சியைக் கொண்ட படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இருவரும் 17 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் இந்தப் படத்தை பதிவேற்றம் செய்தார்.

