துருக்கி-சிரியா நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்வுகள்

1 mins read
69af7ac3-97b5-4e4e-b627-16f5ae079e36
-
multi-img1 of 2

ஜிண்­டேய்­ரிஸ் (சிரியா): வட சிரியா­வில் இடி­பா­டு­களில் பிறந்து சிக்­கி­யி­ருந்த குழந்தை மீட்கப்பட்டி­ருக்­கி­றார். குழந்­தை­யின் தொப்­புள் கொடி அறுக்­கப்­படா­மல் இருந்­தது.

தாய் உட்­பட இக்­கு­ழந்­தை­யின் நெருங்­கிய உற­வி­னர்­கள் உயிர் பிழைக்­க­வில்லை. இதர உற­வி­னர்­கள் குழந்­தையை உயி­ரு­டன் மீட்­ட­னர்.

தமாஸ்­கஸ்: சிரி­யா­வில் ஏழு வயது சிறுமி ஒரு­வர் குழந்தையான தனது தம்­பியை அரவ­ணைத்து ஆறு­தல் தரும் காட்சி­யைக் கொண்ட படம் சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்­டது. இருவரும் 17 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் இந்­தப் படத்தை பதி­வேற்­றம் செய்­தார்.