நியூசிலாந்தை நோக்கி விரையும் சூறாவளி

நியூசிலாந்தை நோக்கி விரையும் சூறாவளி

1 mins read
97beedfa-ea12-4e7d-b02f-7ef4cfbca493
-

வெலிங்­டன்: மிக மோச­மான சூறா­வளி இன்­னும் சில நாள்­களில் நியூ­சி­லாந்­தில் கரை­யைக் கடக்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சூறா­வ­ளிக்கு கேப்­ரி­யேல் என்று பெயர் வைக்­கப்­

பட்­டுள்­ளது.

கேப்­ரி­யேல் சூறா­வளி கார­ண­மாக அந்­நாட்­டின் ஆகப் பெரிய நக­ர­மான ஆக்­லாந்­தில் கன­மழை, வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

எனவே அதற்­குத் தயா­ரா­கும்­படி அந்­ந­கர மக்­களை நியூ­சி­லாந்து அர­சாங்­கம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

நியூ­சி­லாந்­தைப் பொறுத்த வரை, கடந்த 100 ஆண்­டு­களில் இதுவே ஆக மோச­மான சூறா­

வ­ளி­யாக இருக்­கும் என்று அந்­நாட்டு வானிலை மையம் முன்­னு­ரைத்­துள்­ளது.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு ஆக்­லாந்­தில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு கன­மழை பெய்­தது.

அதன் விளை­வாக வெள்­ளம், நிலச்­ச­ரிவு ஆகி­யவை ஏற்­பட்­டன. இவை நியூ­சி­லாந்­துக்­குப் பெரும் பொருட்­சே­தத்தை ஏற்­ப­டுத்­தின.

பொருட்­சே­தம் மட்­டு­மல்­லாது உயிர்ச்­சே­த­மும் ஏற்­பட்­டது. வெள்­ளம், நிலச்­ச­ரிவு கார­ண­மாக நான்கு பேர் மாண்­ட­னர்.

இந்­நி­லை­யில், நியூ­சி­லாந்தை நோக்கி விரைந்து வரும் கேப்­ரி­யேல் சூறா­வ­ளி­யால் ஏற்­படும் பாதிப்­பு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நியூ­சி­லாந்து அர­சாங்­கத்துடன் இணைந்து அந்நாட்டு மக்­களும் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றனர். மீட்­புப் பணி­யா­ளர்­களும் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக நியூ­சி­லாந்து அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.