வானொலி அறிவிப்பாளராகும் கைரி ஜமாலுதீன்

வானொலி அறிவிப்பாளராகும் கைரி ஜமாலுதீன்

1 mins read
1fddab13-a822-4e28-85ff-8fcee98ff414
-

கோலா­லம்­பூர்: அண்­மை­யில் அம்னோ கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட முன்­னாள் மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் வானொலி அறி­விப்­பா­ள­ரா­கக் கள­மி­றங்க இருக்­கி­றார்.

ஹாட் எஃப்எம் எனும் வானொலி நிலை­யத்­தில் திரு கைரி வானொலி அறி­விப்­பா­ள­ராக இணைய இருப்்­ப­தா­க­வும் இம்­மா­தம் 15ஆம் தேதி­யி­

லி­ருந்து வார­நாள்­களில் காலை 6 மணி­யி­லி­ருந்து 10 மணி வரை நிகழ்ச்­சி­க­ளைப் படைப்­பார் என்றும் மலே­சிய ஊடக நிறு­வ­ன­மான மீடியா பிரிமா ஆடியோ தெரி­வித்­தது.

முன்­னாள் ரெம்­பாவ் நாடாளு­ மன்ற உறுப்­பி­ன­ரான திரு கைரி, கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் நடை­பெற்ற மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் சிலாங்­கூர் மாநி­லத்­தில் உள்ள சுங்கை புலோ தொகு­தி­யில் போட்­டி­யிட்­டுத் தோற்­றார். கட்­சி­யின் நிலைப்­பாட்­டுக்கு எதி­ரா­கச் செயல்­பட்­ட­தா­கக் கூறி திரு கைரியை அம்னோ கட்சி நீக்­கி­யது. வானொலி அறி­விப்­பா­ள­ராக திரு கைரி செயல்­ப­டு­வ­தன் மூலம் மலே­சிய வானொ­லித் துறை புதிய அத்­தி­யாயத்­துக்­குள் நுழை­வ­தாக மீடியா பிரிமா ஆடியோ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி நஸ்‌ரீ நூரான் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், சிலாங்­கூர் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட விரும்­பு­வ­தா­க­வும் அம்­

மா­நி­லத்­தின் முதல்­வ­ரா­கப் பதவி வகிக்க இலக்கு

கொண்­டி­ருப்­ப­தா­க­வும் திரு கைரி கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தார்.