பொறுப்பற்ற வகையில் பைடன் பேசியதாக கண்டனம் தெரிவித்த சீனா

பொறுப்பற்ற வகையில் பைடன் பேசியதாக கண்டனம் தெரிவித்த சீனா

2 mins read
95054e90-91b4-44d0-88d2-50e5f3f411b0
-

பெய்­ஜிங்: சீன அதி­பர் ஸி ஜின்­பிங் மாபெ­ரும் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வ­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அண்­மை­யில் கூறிய கருத்­து­கள் மிக­வும் பொறுப்­பற்ற செய­லா­கும் என்று சீனா கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

அனைத்­து­லக வர்த்­த­கத்தை சீனா அதி­கம் சார்ந்­தி­ருப்­ப­தால் அமெ­ரிக்­காவை முழு­மை­யாக எதிர்க்க முடி­யாத நிலை அதற்கு ஏற்­பட்­டுள்­ள­தாக 'பிபி­எஸ் நியூஸ்­

அ­வர்' செய்தி நிறு­வ­னத்­துக்கு நேற்று முன்­தி­னம் அதி­பர் பைடன் பேட்­டி­ய­ளித்­த­போது கூறி­யி­ருந்­தார். அதி­பர் ஸி பல கடு­மை­யான சவால்­களை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் அவ­ரது நிலை­யில் இருக்க தமக்கு விருப்­ப­மில்லை என்­றும் அதி­பர் பைடன் தெரி­வித்­தார்.

இதற்கு சீனா நேற்று கண்­ட­னக் குரல் எழுப்­பி­யது. அதி­பர் பைடன் தெரி­வித்த கருத்­து­கள் சீனா­வுக்­குக் கடும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் வெளி­யு­றவு அமைச்சு கூறி­யது.

அமெ­ரிக்க அதி­ப­ரின் இத்­த­கைய செயல்­பாடு அடிப்­படை அர­ச­தந்­தி­ரக் கொள்­கை­க­ளுக்கு முர­ணா­னது என்று சீன வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித்­

தொ­டர்­பா­ளர் மாவ் நிங் கூறி­னார். அதி­பர் பைடன் கூறிய கருத்­து­களை சீனா திட்­ட­வட்­ட­மாக எதிர்ப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். அண்­மை­யில் அமெ­ரிக்க வான்­வெ­ளி­யில் பலூன் மூலம் சீனா வேவு பார்த்­த­தாக அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் குற்­றம் சாட்­டி­னர். அந்­த பலூன் சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வின் குற்­றச்­சாட்டை சீனா மறுத்­துள்­ளது. அந்­த பலூன் தன்­னு­டைய வானிலை கண்­கா­ணிப்­புச் சாத­னம் என்­றும் அது நிர்­ண­யிக்­கப்­பட்ட திசை­யி­லி­ருந்து விலகி அமெ­ரிக்க வான்­வெ­ளிக்­குள் நுழைந்­த­தாக சீன அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

அந்­த பலூ­னைச் சுட்டு வீழ்த்த எடுக்­கப்­பட்ட முடிவை பேட்­டி­யின்­போது அதி­பர் பைடன் தற்­காத்­துப் பேசி­னார். அத்­து­டன், சீனா­வு­டன் மோத அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.