ஜப்பானை உறையவைக்கும் குளிர்காலம்; விமானச் சேவைகள் ரத்து

1 mins read
c8386cc7-f51e-4e2e-81c3-7412819bfe70
-

தோக்­கியோ: ஜப்­பா­னில் கடும் குளி­ரால் பல விமா­னச் சேவை­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

தலை­ந­கர் தோக்­கியோ, ஒக்­கா­யாமா, ஹிரோ­ஷிமா ஆகி­ய­வற்­றின் விமான நிலை­யங்­களில் ஜப்­பா­னின் 'ஏஎன்ஏ' ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் 18 விமா­னச் சேவை­களை ரத்து செய்­துள்­ளது. சுமார் 2,500 பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஜப்­பான் ஏர்­லைன்ஸ் நிறு­வனம் 32 விமா­னச் சேவை­களை ரத்து செய்­தது. கிட்­டத்­தட்ட 3,600 பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மேலும் சில விமா­னச் சேவை­கள் ரத்­தா­க­லாம் என்­று­ எச்­ச­ரிக்­கப்­பட்­டது.

ஜப்­பா­னின் முக்­கி­யத் தீவான ஹொன்­ஷு­வின் சில பகு­தி­கள் குளிரால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. தோக்­கி­யோ­வில் பனிப்­பொ­ழிவு ஏற்­பட்­டுள்­ளது.