துருக்கி நிலநடுக்கம்: ஐக்கிய நாட்டு நிறுவனம் உதவிக்கரம்

துருக்கி நிலநடுக்கம்: ஐக்கிய நாட்டு நிறுவனம் உதவிக்கரம்

2 mins read
aacffe97-3de9-4693-96ef-a57bef7afdf2
-
multi-img1 of 2

பாப் அல்-ஹாவா (சிரியா): துருக்­கி­யை­யும் சிரி­யா­வை­யும் உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் உத­விக்­க­ரம் நீட்­டு­கிறது.

சிரி­யா­வில் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின்­வ­சம் இருக்­கும் பகு­தி­களுக்கு ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் உத­விப் பொருள்­கள் சென்­ற­டைந்­தன. மேலும் பல உத­விப் பொருள்­கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நில­ந­டுக்­கத்­தால் குறைந்­தது 21,000 பேர் மாண்­டு­விட்­ட­னர். மேலும் சிலர் உயி­ரு­டன் மீட்­கப்­ப­ட­லாம் என்ற நம்­பிக்கை குறைந்து­கொண்டே வரு­கிறது.

கடும் குளிர் மீட்­புப் பணி­களுக்கு இடை­யூ­றாக இருந்து வரு­கிறது.

நில­ந­டுக்­கத்­தால் ஆயி­ரக்­கணக்­கான கட்­ட­டங்­கள் தரை­மட்­ட­மா­யின. இடி­பா­டு­களில் சிக்­கி­யி­ருக்­கும் பலரை மீட்­கும் பணி­கள் சவா­லாக இருந்து வந்­துள்­ளன.

துருக்­கி­யின் அன்­டாக்யா நக­ரின் மருத்­து­வ­மனை ஒன்­றி­லுள்ள வாகன நிறுத்­து­மி­டத்­தில் சட­லங்­க­ளைக்கொண்ட பைகள் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. உற­வி­னர்­கள் அவற்­றைத் தேடிப் பார்க்­கும் நிலை உரு­வெடுத்­தது.

இது, அவலநிலையை எடுத்துக்­காட்­டும் நிகழ்­வா­கக் கூறப்­ப­டு­கிறது.

நிலைமை சரி­வ­ரக் கையா­ளப் பட­வில்லை என்று துருக்­கிய அதி­பர் ரிசெப் டாயிப் எர்­டு­வான் முன்­ன­தா­கக் கூறி­யி­ருந்­தார். அவர் பல தரப்­பி­ன­ரின் கண்­டனத்­திற்கு ஆளா­கி­யி­ருக்­கி­றார்.

இதற்­கி­டையே, சிரி­யா­வில் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளின்­வ­சம் இருக்­கும் ஜிண்­டே­ரிஸ் நக­ரில் இடி­பா­டு­களில் பிறந்த குழந்­தை­யைத் தத்­தெ­டுக்க ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் முன்­வந்­துள்­ள­னர். இடி­பாடு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்­ட­போது இக்­கு­ழந்தை தொப்­புள்­கொ­டி­யு­டன் காணப்­பட்­டது.

குழந்­தை­யின் பெற்­றோர், நான்கு சகோ­த­ரர்­கள் அனை­வ­ரும் நில­ந­டுக்­கத்­தில் உயி­ரி­ழந்­த­னர். மருத்துவமனையில் இருக்கும் இப்பெண் குழந்தை உடல்நலத்துடன் உள்ளது.

மிகுந்த சவா­லான சூழ­லில் பிறந்த இக்­கு­ழந்­தைக்கு அயா என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ள­தெ­னத் தெரி­விக்­கப்­பட்­டது. அரபு மொழி­யில் அயா என்­றால் பேர­தி­ச­யம் என்று பொருள்.