மலேசியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத பொருளியல் வளர்ச்சி

மலேசியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத பொருளியல் வளர்ச்சி

1 mins read
1faf429c-cae5-4851-bd44-fa7444277340
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி சென்ற ஆண்டு 8.7 விழுக்­காடு அதி­க­ரித்­த­தென 'பிஎன்­எம்' எனும் அந்­நாட்­டின் மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது. இது, 20 ஆண்­டு­களுக்­கும் மேல் காணப்படாத வளர்ச்சி.

மேலும், இந்த ஆண்டு மலே­சி­யா­வின் பொரு­ளி­யல் சுருங்­காது என்­றும் வங்கி முன்­னு­ரைத்­துள்­ளது.

சீனா­வின் பொரு­ளி­யல் மீண்­டும் திறந்­து­வி­டப்­பட்­டது, சுற்­றுப்­ப­ய­ணத்­துறை தொடர்ந்து மீண்டு வரு­வது, பழைய, புதிய முதலீட்டுத் திட்டங்கள் உள்­ளிட்ட கார­ணங்­களால் இவ்­வாண்­டும் வளர்ச்சி தொட­ரும் என்று மத்­திய வங்கி எதிர்பார்க்கிறது.

மத்­திய வங்கி இந்த விவ­ரங்­களை நேற்று வெளி­யிட்­டது.

2000ஆம் ஆண்­டில் மலே­சி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 8.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது. அதற்­குப் பிறகு சென்ற ஆண்டு பதிவான வளர்ச்சி விகிதம்தான் ஆக அதி­கம்.