வெளிநாட்டு வேலை மோசடியைத் தடுக்க கடுமையான சட்டங்கள்

வெளிநாட்டு வேலை மோசடியைத் தடுக்க கடுமையான சட்டங்கள்

1 mins read
961da5b4-54e8-43fd-82d2-f339f739e8e6
-

கோலா­லம்­பூர்: போலி­யான வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பு­ ஆசைகளைக் காட்டி ஏமாற்­றும் கூட்­டத்­தி­டம் இருந்து தம் நாட்டு மக்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­காக அது­தொ­டர்­பான சட்­டங்­க­ளைக் கடு­மை­யாக்­கு­வது குறித்து மலே­சிய அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கிறது.

மியன்­மார் உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் இருந்து செயல்­படும் வேலை மோசடி கும்பல்களால் மலே­சி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக அந்­நாட்டு பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் சொன்­னார்.

"கடி­ன­மான நிலைப்­பாட்டை கையாள்­கி­றோம். அத்­து­டன் மலே­சி­யர்­களும் எளி­தில் ஏமாந்­து­போ­கா­மல் விழிப்­பு­டன் இருக்­குமாறு கேட்­டுக்கொள்­கி­றோம்.

"அமைச்­சும் காவல்­து­றை­யும் சட்­டங்­க­ளைக் கடு­மை­யாக்­கு­வது உள்­ளிட்ட தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்து வரு­கின்­றன," என்று தாய்­லாந்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அன்­வார் சொன்­னார்.

மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் சிக்கியிருந்த ஐவர் அண்மையில் மீட்கப்பட்டனர்.

சமூக ஊடக விளம்­ப­ரங்­கள் மூலம் நல்ல சம்­ப­ளத்­திற்கு வாடிக்­கை­யா­ளர் சேவை மைய அதி­கா­ரி­யாக வேலை வாங்­கித் தரு­வ­தாக கூறி மோசடி கும்­பல்­கள் மக்­களை ஈர்க்­கின்­றன.

வேலைக்­காக அவர்­கள் வெளி­நாட்­டிற்­குச் சென்­ற­வு­டன் அவர்­க­ளது பயண ஆவ­ணங்­கள், கைப்­பே­சி­களை அவர்­கள் பிடுங்கிக்­கொள்­கின்றனர்.

வேலைக்­காக வந்­த­வர்­க­ளைத் தடுத்து வைத்து, அவர்­களை இணைய மோச­டிக்­கா­ரர்­க­ளா­க­வும் இணைய சூதாட்­டங்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளா­க­வும் செயல்­பட கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தாக தக­வல்­கள் கூறு­கின்­றன.