ஐந்து ரிங்கிட்டிற்கு உணவு வழங்கும் 15,000 உணவகங்கள்

ஐந்து ரிங்கிட்டிற்கு உணவு வழங்கும் 15,000 உணவகங்கள்

1 mins read
d9b9d170-c281-44fb-b855-5f54fca81fa2
-

கோலா­லம்­பூர்: உணவுப் பொருள்களின் விலை­வாசி உயர்­வைச் சமா­ளிக்க குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் மலே­சி­யா­வில் உள்ள கிட்­டத்­தட்ட 15,000 உண­ வ­கங்­கள் ஐந்து ரிங்­கிட்டுக்கு (1.50 வெள்ளி) உண­வ­ளிக்­கின்­றன.

அர­சாங்­கத்­தின் கருணை பட்­டி­யல் எனும் இத்­திட்­டம் நோன்­புப் பெரு­நா­ளுக்­குப் பிறகு கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் உள்ள பொது உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­படும்.

சாதா­ரண உண­வ­கங்­கள் முதல் பர்­கர் கிங், சாட்­டைம் மலே­சியா போன்றவையும் இந்த திட்­டத்­தில் பங்­கெ­டுத்­துள்­ளன.

பெரும்­பா­லான உண­வ­கங்­கள் சோறு, காய்­க­றி­கள், மீன் அல்­லது கோழிக்­கறி ஆகி­ய­வற்­று­டன் தண்­ணீர் போத்­தல்­களைத் தரு­கின்­றன. பர்­கர் கிங்­கில் கோழி அல்­லது இறைச்சி பர்­கர் ஐந்து ரிங்­கிட்­டிற்கு கிடைக்­கும்.

பிப்­ர­வரி மாத கடைசி வரை இரண்டு வித­மான பபல் டீ ஐந்து ரிங்­கிட்­டிற்­கும் கிடைக்­கும் என்று சாட்­டைம் கூறி­யது.

கேஎ­ஃப்சி, மெக்­டோ­னால்ட்ஸ் ஆகி­ய­வற்­று­ட­னும் இது குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வ­தாக அர­சாங்­கம் தெரி­வித்­தது.