பியூனோஸ் ஏர்ஸ்: ரஷ்ய
கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் அர்ஜெண்டினாவிற்குள் வர முயற்சிப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
அர்ஜெண்டினாவில் குழந்தை பெற்றுக்கொள்ளவதன் மூலம் அந்நாட்டு கடவுச்சீட்டைச் பெற முடியும் என்பதற்காக அவர்கள் அங்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரம் ஆறு ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைய குடிநுழைவு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். சுற்றுலாப் பயணிகள் என்று அவர்கள் பொய் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர், அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளதும் குறிப்பிடத்
தக்கது.
"ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் ஒரே விமானத்தில்
33 ரஷ்ய கர்ப்பிணிப் பெண்கள் வந்தனர்.
"சென்ற ஆண்டு, 21,757 ரஷ்யர்கள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளதாகவும் அவர்களில் கிட்டத்தட்ட 10,500 பேர் கர்ப்பிணிகள்.
"கடந்த சில மாதங்களாக இது மேலும் அதிகரித்துள்ளது. சென்ற மூன்று மாதத்தில் 5,819 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்கு வந்துள்ளனர்," என்றார் அர்ஜெண்டினா குடிநுழைவு அதிகாரி ஒருவர்.
அர்ஜெண்டினாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக அர்ஜெண்டினா குடியுரிமை கிடைப்பதோடு, அவர்கள் மூலம் பெற்றோரும் அந்நாட்டு குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

