பணிப்பெண்ணிற்கு 147,000 வெள்ளி இழப்பீடு

பணிப்பெண்ணிற்கு 147,000 வெள்ளி இழப்பீடு

1 mins read
f64fcc9a-7f2c-48d6-bdb6-17e92b6f37fd
-

ஹாங்காங்: ஹாங்­காங்­கில் தமது முன்­னாள் முத­லா­ளி­யால் அடித்­தும் தீயி­னால் சுட்­டும் துன்­பு­றுத்­தப்­பட்ட இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண்­ணிற்கு 868,000 ஹாங்­காங் டாலர் (S$147,000) இழப்­பீடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இப்­போது 40 வய­தா­கும் திரு­வாட்டி கர்த்­திக்கா புஸ்­பி­தா­சரி (படம்) என்ற அந்த பணிப்­பெண் பத்­தாண்­டு­க­ளுக்­கு­முன் கடும் துன்­பு­றுத்­த­லுக்­குள்­ளா­னது ஹாங்­காங்­கில் பெரிய அள­வில் பேசப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, பணிப்­பெண்­க­ளின் பாது­காப்பு தொடர்­பில் போராட்­டங்­களும் வெடித்­தன.

இத­னை­ய­டுத்து, கர்த்­திக்­கா­வின் முத­லா­ளி­க­ளின் மீது 2013ஆம் ஆண்டு குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு, சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

சூடு­வைத்­தும் இரும்­புச் சங்­கி­லி­யால் அடித்­தும் உடல்­ரீ­தி­யா­கப் பெரும் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளாக்­கப்­பட்ட கர்த்­திக்கா மன­ரீ­தி­யா­க­வும் பாதிக்­கப்­பட்­டார்.

தம்மை வழக்­கில் வெற்­றி­பெ­றச் செய்த வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக்­கொண்ட கர்த்­திக்கா, அவர்­கள் தம்­மீது வெளிப்­ப­டுத்­திய அன்­பைச் சொல்ல வார்த்­தை­களே இல்லை என்று நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­னார்.

ஹாங்­காங்­கில் ஏறக்­கு­றைய 340,000 பணிப்­பெண்­கள் வேலை செய்­கின்­ற­னர். அவர்­களில் பெரும்­பா­லோர் இந்­தோ­னீ­சியா மற்­றும் பிலீப்­பீன்­சைச் சேர்ந்­த­வர்­கள். படம்: ஏஎஃப்பி