ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள நிலவழிச் சோதனைச்சாவடிகளில் இருக்கும் மின்நுழைவாயில்
களைப் பயன்படுத்தும்படி சிங்கப்பூரர்களுக்கு மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
குறுகிய கால விரைவு நட
வடிக்கைக் குழுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதிலிருந்து ஜோகூர் பாலத்தில் போக்கு
வரத்து நெரிசல் குறைந்திருப்பதாக மலேசியக் குடிநுழைவு ஆணையத்தின் தலைமை இயக்குநர் கைருல் ஸாய்மி டாவூத் தெரிவித்தார்.
மின்நுழைவாயில்களைப் பயன்படுத்த சிங்கப்பூரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதும் இதற்குப் பங்களித்திருப்பதாக அவர் கூறினார்.
இந்நிலையில், கூடுதல் சிங்கப்பூரர்கள் மின்நுழைவாயில்
களைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். குறிப்பாக, ஒரே நாளில் ஜோகூருக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் இந்த மின்நுழைவாயில்களைப் பயன்படுத்த
ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கடந்த மாதம் 20ஆம் தேதியிலிருந்து மின்நுழைவாயில்களைப் பயன்படுத்த சிங்கப்பூரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது முதல் ஏறத்தாழ 16,000 சிங்கப்பூரர்கள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தி தங்கள் கடப்பிதழ்களை ஸ்கேன் செய்துள்ளனர். மின்வாயில்களை 35,000 சிங்கப்பூரர்கள் பயன்படுத்துவர் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட இதுவரை மின்நுழைவாயில்
களைப் பயன்படுத்திய சிங்கப்
பூரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
"மின்நுழைவாயில்கள் குறித்து சிங்கப்பூர் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்
படுத்த அடுத்த வாரம் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். குறிப்பாக, கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கவும் பொழுதுபோக்கிற்காக ஒரே நாளில் ஜோகூர் வந்து செல்லும் சிங்கப்பூரர்களுக்கு அவை தரப்படும்," என்றார் திரு கைரி.
ஜோகூர் சோதனைச்சாவடிகளில் உள்ள மின்நுழைவாயில்|
களைப் பயன்படுத்தும் சிங்கப்
பூரர்கள் மின்கடப்பிதழ்களை வைத்திருக்க வேண்டும்.
அக்கடப்பிதழ்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்குச்
செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.
மின்நுழைவாயில்களை முதல்
முறையாகப் பயன்படுத்துவோர் குடிநுழைவு முனையத்தில் தங்கள் பயோமெட்ரிக்சை சரிபார்த்து உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று மலேசிய குடிநுழைவு ஆணையம் கூறியது.

