புத்ரா ஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பொருளியல் ஆலோசகர் பதவியி
லிருந்து அவரது மகள் நூருல் இஸா விலகியுள்ளார்.
அதற்குப் பதிலாக அவர் நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் இணைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
திரு அன்வாரின் பொருளியல் ஆலோசகராக திருவாட்டி நூருல் இஸா நியமிக்கப்பட்டபோது திறமைக்கு மதிப்பளிக்காமல் சொந்தபந்தங்களுக்குப் பதவிகளை அள்ளித் தரும் அணுகுமுறையை திரு அன்வார் கடைப்பிடிப்பதாக
அதிருப்திக் குரல்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 42 வயது திருவாட்டி இஸா போட்டியிட்டுத் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாட்டி இஸா தற்போது தலைமை தாங்கும் நிதி அமைச்சு ஆலோசனைக் குழு தொடர்பாக இம்மாதம் 7ஆம் தேதியன்று பிரதமர் அன்வார் அறிவித்தார்.
இக்குழு மலேசிய நிதி அமைச்சருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

