விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பல்

விபத்துக்குள்ளான சிங்கப்பூர் கப்பல்

1 mins read
681a2e1a-eb15-446e-b1e5-732a8093f3e5
-

ஹோ சி மி்ன்: வியட்­னா­மிய கடற்­ப­கு­தி­யில் சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­பட்ட கொள்­க­லன் கப்­பல் விபத்­துக்­குள்­ளா­னது. இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் காலை நிகழ்ந்­தது.

வான் ஹாய் 288 எனும் அந்­தக் கப்­பல் ஹோ சி மின் நக­ரில் உள்ள துறை­மு­கத்தை நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது பஹா­மா­சைச் சேர்ந்த ரிசர்­ஜன்ஸ் எனும் கப்­பல் மீது மோதி­யது.

அந்­தக் கப்­பல் வான் ஹாய் 288 கப்­ப­லுக்கு எதிர்­த்தி­சை­யில் சென்­று­கொண்­டி­ருந்­த­தாக வியட்­னா­மிய நாளி­தழ் தெரி­வித்­தது.

"விபத்து கார­ண­மாக யாரும் காயம் அடைந்­த­தா­கவோ எண்­ணெய்க் கசிவு ஏற்­பட்­ட­தா­கவோ தெரி­ய­வில்லை. இரண்டு கப்­பல்­களும் சீரான நிலை­யில் இருக்­கின்­றன. வான் ஹாய் 288 கப்­பல் பத்­தி­ர­மாக கப்­பல் பட்­ட­றை­யில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டுள்­ளது," என்று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­மு­க ஆணை­யம் தெரி­வித்­தது. கப்­ப­லின் உரி­மை­

யா­ளர்களுடன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் விபத்து குறித்து விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்­றும் ஆணை­யம் கூறி­யது.

விபத்து நிகழ்ந்­த­போது வான் ஹாய் 288 கப்­ப­லில் ஏறத்­தாழ 1,400 கொள்­க­லன்­கள் இருந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.