ஹோ சி மி்ன்: வியட்னாமிய கடற்பகுதியில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கொள்கலன் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் காலை நிகழ்ந்தது.
வான் ஹாய் 288 எனும் அந்தக் கப்பல் ஹோ சி மின் நகரில் உள்ள துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பஹாமாசைச் சேர்ந்த ரிசர்ஜன்ஸ் எனும் கப்பல் மீது மோதியது.
அந்தக் கப்பல் வான் ஹாய் 288 கப்பலுக்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருந்ததாக வியட்னாமிய நாளிதழ் தெரிவித்தது.
"விபத்து காரணமாக யாரும் காயம் அடைந்ததாகவோ எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவோ தெரியவில்லை. இரண்டு கப்பல்களும் சீரான நிலையில் இருக்கின்றன. வான் ஹாய் 288 கப்பல் பத்திரமாக கப்பல் பட்டறையில் நங்கூரமிடப்பட்டுள்ளது," என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. கப்பலின் உரிமை
யாளர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஆணையம் கூறியது.
விபத்து நிகழ்ந்தபோது வான் ஹாய் 288 கப்பலில் ஏறத்தாழ 1,400 கொள்கலன்கள் இருந்ததாக அறியப்படுகிறது.

