தெஹ்ரான்: ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நிகழ்ந்து நேற்று முன்தினத்துடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதைக் கொண்டாடும் வகையில் ஈரானிய அரசாங்கம் பல பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தது. இந்நிலையில், ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசியின் உரை ஈரானியத் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஆனால், அரசாங்கத்தை எதிர்க்கும் இணைய ஊடுருவல்காரர்களால் இணையத்தில் செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்பு கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்குத் தடைபட்டது. அப்போது திரையில் அரசாங்க எதிர்ப்பாளர்களின் சின்னம் காட்டப்பட்டது.

