பிலிப்பீன்ஸ்: லேசர் ஒளிக்கற்றைக்கு சீனா பொறுப்பு

பிலிப்பீன்ஸ்: லேசர் ஒளிக்கற்றைக்கு சீனா பொறுப்பு

1 mins read
96ef3951-9f1b-433c-9013-498dddc97743
-

மணிலா: தனது கடற்­ப­டைக் கப்­பல் ஒன்­றைக் குறி­வைத்து சீனா லேசர் ஒளிக்­கற்­றை­யைப் பாய்ச்­சி­ய­தாக பிலிப்­பீன்ஸ் குற்­றஞ்­சாட்டி­யுள்­ளது. அந்த ஒளிக்­கற்றை ராணு­வத் தரம் வாய்ந்­தது.

இம்­மா­தம் ஆறாம் தேதி­யன்று மேற்கு பிலிப்­பீன்ஸ் கட­லில் (சம்பந்தப்பட்ட தென்சீனக் கடல் பகுதிக்கு பிலிப்பீன்ஸ் வைத்த பெயர்) உள்ள அயுங்­கின் ஷோல் பகு­தி­யில் பிலிப்­பீன்­சின் 'பிஆர்பி மலப்­பாஸ்­குவா' கடற்­ப­டைக் கப்­பல் பணி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­ருந்­தது.

அன்று 5205 என்ற எண்­ணைக் கொண்ட சீனா­வின் கடற்­ப­டைக் கப்­பல் ஒன்று 'பிஆர்பி மலப்­பாஸ்­குவா'வைக் குறி­வைத்து இரண்டு முறை பச்சை நிற லேசர் ஒளிக்­கற்­றை­யைப் பாய்ச்­சி­யது. அத­னால் சிறிது நேரத்­திற்­குக் கப்­ப­லில் இருந்­தோ­ரின் கண் பார்வை மங்கிப்­போ­ன­தென பிலிப்­பீன்ஸ் கடற்­படை தெரி­வித்­தது.

இச்செயலை பிலிப்பீன்ஸ் கடற்படைத் தளபதி அட்மிரல் அர்ட்டெமியோ அபு வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.