'நிலையற்ற சூழல் இருந்திருக்காது'

'நிலையற்ற சூழல் இருந்திருக்காது'

2 mins read
490ac045-abb0-4cad-88d0-dc77ac36eb32
-

கோலா­லம்­பூர்: கடந்த நான்­காண்­டு­க­ளாக மலே­சி­யா­வைப் பெரி­தும் பாதித்த நிலை­யற்ற அர­சி­யல் சூழலைத் தவிர்த்திருக்கலாம்; மக்­க­ளுக்­குச் சேவை­யாற்­றும் நோக்­கு­டன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சியல் தலை­வர்­களும் கருத்து வேறு­பா­டு­களை ஒதுக்கி வைத்­தி­ருந்­தால் அது சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கும் என்று மலே­சி­ய மாமன்­னர் அப்­துல்லா அக­மது ஷா கூறி­யுள்­ளார்.

மலே­சி­ய நாடா­ளு­மன்ற அமர்­வின் தொடக்க உரை­யில் மாமன்­னர் பேசி­னார். இதுவே நாட்­டின் மாமன்­ன­ராக அவர் ஆற்­றும் கடைசி நாடா­ளு­மன்ற உரை. மலே­சிய அர­சி­ய­லில் தலை­யி­டும் எண்­ணம் தமக்கு என்றுமே இருந்ததில்லை என்­று மாமன்னர் குறிப்­பிட்­டார்.

"நான்­தான் நான்கு வெவ்­வேறு அர­சாங்­கங்­க­ளு­டனும் நான்கு பிர­த­மர்­க­ளு­ட­னும் பணி­யாற்­றிய ஓரே மாமன்­னர் என்­பது தேசத்­தின் வர­லாற்­றில் அழிக்­க­மு­டி­யாத நிகழ்­வாக இடம்­பெற்­று­விட்­டது," என்­றார் மாமன்­னர். 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 31ஆம் தேதி­யன்று அவர் மாமன்­ன­ரா­கப் பொறுப்­பேற்­றார்.

"மலே­சி­யா­வின் ஏழா­வது பிர­த­மர் (டாக்­டர் மகா­தீர் முகம்­மது) பதவி வில­கு­வ­தற்கு முன்பு நிகழ்ந்த சம்­ப­வங்­கள் இடம்­பெ­றா­மல் இருந்­தி­ருந்­தால் நாட்­டின் 15வது பொதுத் தேர்­தல் வரை நீடித்த நிலையற்ற அர­சி­யல் சூழலும் இருந்­தி­ருக்­காது," என்று மாமன்­னர் கருத்து தெரி­வித்­தார்.

"எல்­லா­வற்­றுக்­கும் மேலாக, நாம் நேசிக்­கும் தேசம், மக்களின் அக்­க­றை­க­ளைப் பாது­காக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சி­யல் தலை­வர்­களும் தங்­களுக்­கி­டையே உள்ள கருத்து வேறு­பா­டு­களை ஒதுக்கி வைத்­தி­ருந்­தால் கிட்­டத்­தட்ட நான்கு ஆண்­டு­க­ளாக நாட்­டைப் பாதித்த அர­சி­யல் நெருக்­க­டி­யைத் தவிர்த்­தி­ருக்கலாம்," என்­றும் அவர் சொன்­னார்.

டாக்­டர் மகா­தீ­ரருக்­குப் பிறகு முகை­தீன் யாசின், இஸ்­மா­யில் சாப்ரி யாக்­கோப் ஆகி­யோர் பிர­த­மர்­ பதவியை வகித்­த­னர். தற்­போது பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹி­ம் பிர­த­ம­ராக இருக்­கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் தலைவர்களையும் சாடிய மலேசிய மாமன்னர்