'ஜோகூர் பாருவின் சுங்கத்துறை சோதனை நடைமுறைகள் துரிதமாகியுள்ளன'

1 mins read
f63e808b-8521-40d4-bcd0-a43a6956b026
-

ஜோகூர் பாரு: சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் இணைக்­கும் காஸ்வே கடற்­பா­லத்­தின் ஜோகூர் பாரு­வின் பகு­தி­யில் சோதனை நட­வ­டிக்­கை­கள் துரி­த­மா­கி­யுள்­ள­தாக மலே­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். அதைத் தொடர்ந்து ஒரு மணி­நே­ரத்­துக்கு சுமார் 2,300 வாக­னங்­கள் மலே­சி­யா­வுக்­குள் நுழைய முடி­வ­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

முன்­ன­தாக ஒரு மணி­நே­ரத்­துக்கு சுமார் 1,400 வாக­னங்­கள் மட்­டுமே மலே­சி­யா­வுக்­குள் நுழைந்­தன.

குறு­கிய காலத்­திற்காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட சில நட­வடிக்கை­க­ளால் இது சாத்­தி­ய­மா­கி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாங்­கு­னான் சுல்­தான் இஸ்­கந்­தார் சுங்­கச் சாவடி உள்­ளிட்­ட­வற்­றில் நடை­மு­றை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக மலே­சி­யா­வின் குடி­நு­ழை­வுப் பிரிவு தலைமை இயக்­கு­நர் கைருல் ட்ஸ்ாய்மி தாவுத் குறிப்­பிட்­டார்.

சோதனை முறை­களை மேம்­படுத்த இம்­மா­தம் ஆறாம் தேதி­யன்று வேக­மாக இயங்­கு­வ­தற்கு வழி­வ­குக்­கும் 'கியூ­ஆர்டி' நடை­மு­றை­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டன. அதை­ய­டுத்து நிலைமை மேம்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'கியூ­ஆர்டி', போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் கையாள உத­வும் குறு­கிய காலத் திட்­டம் என்று திரு கைருல் சொன்­னார்.

"குடிநுழைவு மின்­நு­ழை­வா­யிலை சிங்­கப்­பூ­ரர்­கள் இப்­போது பயன்­ப­டுத்த முடி­வ­தால் பேருந்­தில் ஜோகூருக்கு வரு­வோர் இனி குடி­நு­ழை­வுச் சோத­னை­களை விரை­வில் கடக்­க­லாம். முன்­ன­தாக மலே­சி­யக் கடப்­பி­தழ்­களை வைத்­தி­ருப்­போர் மட்­டுமே அதைப் பயன்­ப­டுத்த முடிந்­தது," என்று திரு கைருல் குறிப்­பிட்­டார்.

சென்ற மாதம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரர்­கள் மின்­நு­ழை­வா­யி­லைப் பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.