புக்கெட்: தாய்லாந்தின் பிரபல சுற்றுலாத்தளமான புக்கெட் தீவுக்குச் செல்வோர் ஜெல்லிஃபிஷ் நீரினங்களைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர். இத்தீவின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புக்கெட்டின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டா கடற்கரையில் ஜெல்லிஃபிஷ் நீரினங்கள் தங்களைக் கடித்ததாக 30க்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பத்தோங், நய் யாங், சுரின் உள்ளிட்ட புக்கெட்டின் 20க்கும் மேற்பட்ட கடற்கரைப் பகுதிகளில் எச்சரிக்கைக் குறிப்புகள் அமைக்கப்பட்டன. வழிப்புணர்வை அதிகரித்து முதலுதவி குறித்த தகவல்களைத் தெரியப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

