துருக்கி நிலநடுக்கம்: தொடர்ந்து பலர் உயிருடன் மீட்பு

துருக்கி நிலநடுக்கம்: தொடர்ந்து பலர் உயிருடன் மீட்பு

1 mins read
9a40568c-a197-4203-b8a2-f90bc0f6cf93
-

கஹ்­ர­மான்­ம­ராஸ் (துருக்கி): துருக்கி, சிரியா ஆகி­ய­வற்றை உலுக்­கிய நில­ந­டுக்­க­தில் மாண்­டோ­ரின் எண்­ணிக்கை ஆகக் கடைசி நில­வ­ரப்­படி 35,000ஐத் தாண்­டி­யுள்­ளது. அதே வேளையில், நில­ந­டுக்­கம் உலுக்கி சுமார் ஒரு வாரம் ஆகி­யி­ருக்­கும் நிலை­யில் பலர் தொடர்ந்து உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டும் வரு­கின்­றனர்.

ஓர் ஏழு வயது சிறு­வ­னும் 62 வயது மாதும் எதிர்­பாரா வகை­யில் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, போரால் அவ­திப்­படும் சிரி­யா­வின் நில­ந­டுக்­கம் உலுக்­கிய பகு­தி­க­ளுக்கு உத­விப் பொருள்­க­ளைக் கொண்டு சேர்க்­கும் முயற்­சி­யில் பின்­ன­டைவு ஏற்­பட்­டி­ருப்­பதை ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் ஒப்­புக்­கொண்­டது.

உத­விப் பொருள்­க­ளைக் கொண்டு சேர்க்­கும் ஐக்­கிய நாட்­டுக் குழு வட­மேற்கு சிரி­யா­வைச் சென்­ற­டைந்­தது. எனி­னும், வீடு­களை இழந்த மில்­லி­யன்­க­ணக்­கா­னோ­ருக்­குக் கைகொ­டுக்க இன்­னும் பெரிய அள­வில் உதவி தேவை என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் நிவா­ர­ணப் பணித் தலை­வர் மார்ட்­டின் கிரி­ஃபித்ஸ் குறிப்­பிட்­டார்.