அன்வார்: பொருள், சேவை வரி இருக்காது

அன்வார்: பொருள், சேவை வரி இருக்காது

1 mins read
e81be1fb-2333-42bf-a991-e5de3ca651d7
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பொருள், சேவை வரி மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது என்று அந்­நாட்­டுப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் தெரி­வித்­துள்­ளார்.

அதி­க­ம­ான தேசி­யக் கடனை மலே­சியா எதிர்­நோக்கி வரு­கிறது. இருந்­தா­லும் பொருள், சேவை வரி­யைப் போல் பல பய­னீட்­டாளர்­க­ளைக் குறி­வைக்­கும் எந்த வரி­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாது என்று திரு அன்­வார் குறிப்­பிட்­டார்.

அதற்­குப் பதி­லாக செல்­வந்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலுகை­க­ளைக் குறைப்­பது, ஊழ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது போன்­ற­வற்­றில் தமது அர­சாங்­கம் கவ­னம் செலுத்­தும் என்று அவர் கூறி­னார்.

"மின்­சார வரி­யில் செய்­த­தைப் போல் செல்­வந்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சலு­கை­க­ளைக் குறைக்க நாங்­கள் திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்று திரு அன்­வார் சொன்­னார். தைப்­பிங் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் வோங் கா வோவின் கேள்விக்­குப் பதி­ல­ளிக்­கும்­போது திரு அன்­வார் இதைக் குறிப்­பிட்டார்.

மலே­சி­யா­வில் முன்­ன­தாக மின்­சார வரிக் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­ப­ட­வி­ருந்­தது. பிர­த­ம­ராகப் பத­வி­யேற்ற பிறகு திரு அன்­வார் பொது­மக்­க­ளுக்­கான மின்­சார வரியை உயர்த்­த­வில்லை. ஆனால், அனைத்­து­லக நிறு­வ­னங்­க­ளுக்கு வரி உயர்வை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்.

இதற்­கி­டையே, கடு­மை­யான நில­ந­டுக்­கத்­தால் பாதிக்­கப்­பட்டுள்ள துருக்­கிக்கு திரு அன்­வார் ஒரு­நாள் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். அவர் நேற்­றி­ரவு துருக்­கிக்­குப் புறப்­ப­டத் திட்­ட­மிடப்­பட்­டி­ருந்­தது.

பெரும் இன்­ன­லுக்கு ஆளா­கி­யி­ருக்­கும் துருக்­கிய மக்­க­ளுக்கு ஆத­ரவு ெதரி­விக்க திரு அன்­வார் அந்­நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். துருக்­கிய அதி­பர் ரிசெப் டாயிப் எர்­டு­வானு­டன் பேசிய பிறகு அவர் இந்த முடிவை எடுத்­தார்.

திரு அன்­வார் இன்று மலே­சியா திரும்­பு­வார்.