அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு, குறைந்தது மூவர் மரணம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு, குறைந்தது மூவர் மரணம்

1 mins read
44a2d457-91ff-4508-9df2-29954aa81122
-

லாஸ் ஏஞ்­ச­லீஸ்: அமெ­ரிக்­கா­வின் மிச்­சி­கன் மாநி­லத்­தின் மிச்­சி­கன் ஸ்டேட் பல்­க­லைக் கழ­கத்­தில் நிகழ்ந்த துப்­பாக்­கிச்­சூட்­டுத் தாக்­கு­த­லில் குறைந்­தது மூவர் மாண்­ட­னர், ஐவர் காய­ம­டைந்­த­னர். காய­ம­டைந்­தோ­ரில் சில­ருக்கு உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய காயங்­கள் ஏற்­பட்­டன.

சம்­ப­வம் உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் இரவு நேர்ந்­தது. துப்­பாக்­கிச்­சூடு நிகழ்ந்­த­போது பல மாண­வர்­கள் தப்­பி­யோ­டி­னர். தாக்­கு­தல்­கா­ரர் பல பாது­காப்பு அதி­கா­ரி­க­ளைத் தாண்­டிச் சென்­ற­தா­க­வும் பல்­கலைக் கழ­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய பிறகு தனது உயிரை மாய்த்­துக்­கொண்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

43 வயது தாக்­கு­தல்­கா­ரர் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் மாண்ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.