தம் கைப்பேசியில் விளையாடுவதற்குத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாமிசம் அரிய பயன்படுத்தப்படும் வெட்டுக்கத்தியைக் கொண்டு சிறுவன் ஒருவன் அவனுடைய தந்தையை மிரட்டுவதைக் காட்டும் காணொளி ஒன்று சீனாவில் வேகமாகப் பரவியது.
அச்சிறுவனின் கைப்பேசியை அவனுடைய தந்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அச்சிறுவன், வெட்டுக்கத்தியை எடுத்து தந்தையை மிரட்டினான்.
அச்சிறுவன் தொடக்கப்பள்ளி மாணவன் என நம்பப்படுகிறது. குளிர்காலம் முடிந்து பள்ளிப் பருவம் தொடங்கியதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்தது.
சீன சமூக ஊடக நிறுவனமான 'வெய்போ'வில் இந்தக் காணொளி அதிகம் தேடப்பட்டு வந்தது. இதுவரை ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர்.
இக்காணொளியைப் பார்த்த பிறகு இணையவாசிகள் சிலர், தொழில்நுட்பச் சாதனங்களில் விளையாடும் பழக்கத்திற்குச் சிறுவர்கள் அடிமையாகியிருப்பது குறித்து கவலையை வெளிப்படுத்தினர்.

