ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாப்புவா வட்டாரத்தில் பொது மக்களில் நால்வர் கொல்லப்பட்ட விவகாரத்தின் தொடர்பில் நான்கு ராணுவ வீரர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் உள்ள ராணுவ நீதிமன்றம் ஒன்று தீர்ப்பை வழங்கியது.
குற்றவாளிகளில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு 20 ஆண்டுச் சிறைத் தண்டனையும் இன்னொருவருக்கு 15 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.
நீதிமன்ற ஆவணங்களில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மாண்ட நால்வர் அந்த ராணுவ வீரர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்க முயற்சி செய்தனர். அந்தப் பரிவர்த்தனை எதிர்பார்த்த வண்ணம் செல்லாத வேளையில் நால்வரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

