பிலிப்பீன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம், உயிர்ச் சேதம் இல்லை

1 mins read
a77adfc1-2299-4d64-bd57-0f4b9e032c44
பிலிப்­பீன்­சின் மத்­தி­யப் பகு­தியை 6.1 ரிக்­டர் அள­வி­லான நில­ந­டுக்­கம் உலுக்­கி­யது. படம்: பிக்ஸாபே -

மணிலா: பிலிப்­பீன்­சின் மத்­தி­யப் பகு­தியை 6.1 ரிக்­டர் அள­வி­லான நில­ந­டுக்­கம் உலுக்­கி­யது.

நில­ந­டுக்­கம் உலுக்­கிய பிறகு நில அதிர்­வு­கள் ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் சேதம் ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்­றும் உள்­ளூர் நிலத்­தடி கண்­கா­ணிப்பு அமைப்பு எச்­ச­ரித்­தி­ருந்­தது. எனி­னும், ஆகக் கடைசி நில­வ­ரப்­படி சேதம் ஏதும் ஏற்­பட்­ட­தா­கவோ உயி­ரி­ழப்பு இருந்­த­தாகவோ தக­வல் ஏதும் இல்லை.

சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­ட­வில்லை.

நில­ந­டுக்­கம் தொடங்­கிய இடம் மியாகா என்ற கிரா­மத்­துக்கு 11 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்­ளது. அப்­ப­குதி, மாஸ்­பேட் மாநி­லத்­தில் உள்ள உசோன் நக­ரில் அமைந்­துள்­ளது.

நில­ந­டுக்­கம் உலுக்­கி­ய­போது சில குடி­யி­ருப்­பா­ளர்­கள் வீடு­க­ளிலி­ருந்து வெளி­யே­றி­ய­தாக உசோன் காவல்­து­றைத் தலை­வர் தெரி­வித்­தார். கடைசியாக சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மோசமான நிலநடுக்கம் பிலிப்பீன்சை உலுக்கியது.