பழைய நிலைக்குத் திரும்பும் சீனாவின் விமானப் பயணங்கள்

பழைய நிலைக்குத் திரும்பும் சீனாவின் விமானப் பயணங்கள்

1 mins read
b47c8683-e430-4117-8562-7992974a9e8e
-

ஷாங்­காய்: சீனா­வின் மூன்று முன்­னணி விமான நிறு­வ­னங்­களின் விமா­னச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­தும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை நன்கு மீண்டு வரு­வதாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்ற மாதம் சைனா சவு­தர்ன் ஏர்­லைன்ஸ் விமா­னங்­களின் 72.7 விழுக்­காட்டு இருக்­கை­கள் நிரப்­பப்­பட்­டன. சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் இந்த விகி­தம் 63 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சீனா­வின் மூன்று முன்­னணி விமான நிறு­வ­னங்­களில் சைனா சவு­தர்­னின் விமா­னங்­க­ள்தான் பயணிகளால் ஆக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.

ஏர் சைனா நிறு­வ­னத்­தின் விமா­னங்­களில் 69.9 விழுக்­காட்டு இருக்­கை­கள் சென்ற மாதம் நிரப்­பப்­பட்­டன. சைனா ஈஸ்­டர்ன் நிறு­வ­னத்­தின் விமா­னங்­க­ளுக்கு இந்த விகி­தம் 68.3 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

பயன்­ப­டுத்­தப்­படும் இருக்­கை­களின் விகிதம், விமான நிறு­வனங்­க­ளால் எவ்­வ­ளவு லாபம் ஈட்ட இயலும் என்­ப­தற்­கான அறி­கு­றி­.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் உட்­பட சீனா­வில் கிட்­டத்­தட்ட மூன்­றாண்­டு­க­ளாக நீடித்த கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் சென்ற ஆண்டிறுதியில் விலக்­கப்­பட்­டன. அதையடுத்து சீனப் புத்­தாண்டை யொட்டி சென்ற மாதம் குடும்­பத்­தா­ரு­டன் நேரம் செல­விட பலர் தங்­க­ளின் சொந்த ஊர்­க­ளுக்­குத் திரும்­பிச் சென்­ற­னர். அது, அதிக­மா­னோர் விமா­னச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்கு முக்­கி­யக் கார­ண­மா­கும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் கார­ண­மாக சைனா சவு­தர்ன், ஏர் சைனா, சைனா ஈஸ்­டர்ன் ஆகிய மூன்று நிறு­வ­னங்­களும் கடந்த மூன்­றாண்­டு­களில் 190 பில்­லி­யன் யுவென் (37 பில்­லி­யன் வெள்ளி) தொகையை இழக்க நேரிட்­டது. சென்ற ஆண்டு அவற்றின் இழப்பு மேலும் மோசமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.