வியட்நாமில் மருந்துகளுக்காகக் கொல்லப்பட்ட 2,000 பூனைகள்

வியட்நாமில் மருந்துகளுக்காகக் கொல்லப்பட்ட 2,000 பூனைகள்

1 mins read
4e1100d2-1849-4ea1-b1d0-4a0db1d5c3b5
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் -

வியட்நாமின் இறைச்சி கூடம் ஒன்றில் மாண்ட நிலையில் 2,000 பூனைகளை அந்நாட்டு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

பாரம்பரிய மருந்துகள் உற்பத்தி செய்யும் நோக்கில் அவை சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

டாங் தாப் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது. இறைச்சி கூடத்தில் உயிருடன் 480 பிராணிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பூனைகளின் எழும்புகள் ஆஸ்துமா போன்ற நோய்களை குணமாக்கும் என்று வியட்நாமில் சிலர் நம்புகின்றனர்.

அதன் காரணமாக ஆண்டிற்கு ஏறத்தாழ ஒரு மில்லியன் பூனைகள் வியட்நாமில் சட்டவிரோதமாகக் கொல்லப்படுவதாக அமைப்புகள் கூறுகின்றன.

வியட்நாமில் பூனைகளை சாப்பிடலாம் ஆனால் வியாபாரிகள் அதற்கான சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.