கேப்ரியேல் புயல் தாண்டவம்; மரண எண்ணிக்கை அதிகரிப்பு

கேப்ரியேல் புயல் தாண்டவம்; மரண எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
8f80a5cd-5cf1-4a76-8791-e65e06be6fdc
-

வெலிங்­டன்: கேப்­ரி­யேல் புயல் கார­ண­மாக நியூ­சி­லாந்­தில் மாண்­டோர் எண்­ணிக்கை நேற்று மாலை நில­வ­ரப்­படி 8ஆக அதி

­க­ரித்­துள்­ளது. மாண்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் கிறிஸ் ஹிப்­கின்ஸ் அச்­சம் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், புய­லால் ஏற்­பட்ட வெள்­ளம் கார­ண­மாகப் பல நக­ரங்­கள், கிரா­மங்­கள் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சாலை­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யி­ருப்­ப­தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பல பகு­தி­களை அவ­ச­ர­கால மீட்­புப் பணி­யா­ளர்­க­ளால் சென்­ற­டைய முடி­ய­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நியூ­சி­லாந்­தின் வடக்­குத் தீவின் வடக்­குப் பகு­தியை புயல் உலுக்­கி­யுள்­ளது. அங்­கி­ருந்து அது கிழக்­குக் கடற்­க­ரை­யோர மா­கச் செல்­கிறது. அது செல்­லும் வழி­யெல்­லாம் மன­தைப் பத­ற­வைக்­கும் சேதங்­கள் ஏற்­பட்­டுள்­ளன. புயல் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள கன­மழை, வெள்­ளம் ஆகி­ய­வற்­றால் அங்­குள்ள மக்­க­ளின் அன்­றாட இயல்பு வாழ்க்கை நிலை­கு­லைந்­துள்­ளது.

பண்­ணை­கள், பாலங்­கள் ஆகி­யவை இருந்த இடம் தெரி­யா­மல் போய்­விட்­டன. பல கால்­ந­டை­கள் மடிந்து­விட்­டன. வீடு­க­ளுக்­குள் வெள்­ள­நீர் புகுந்­ததை அடுத்து, பலர் தங்­கள் வீட்டுக் கூரை­கள் மீது நின்று உத­விக்­காக காத்­தி­ருப்­ப­தாக நியூ­சி­லாந்து அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நேற்று பிற்­ப­கல் நில­வ­ரப்­படி 4,500க்கும் மேற்­பட்­டோ­ரைக் காண­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் மாய­மா­ன­வர்­க­ளின் உயி­ருக்கு ஆபத்து ஏதும் ஏற்­பட்­டி­ருக்­காது என்று நியூ­சி­லாந்து காவல்­துறை நம்­பு­கிறது. அவர்­களில் பல­ரி­டம் கைப்பேசி இல்­லா­மல் இருந்­தி­ருக்­கும் என்று அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர். இந்­நி­லை­யில், வெள்­ளத்­தால் பல பண்­ணை­கள் அடித்­துச் செல்­லப்­பட்­டதை அடுத்து, அங்கு விளைந்­தி­ருந்த காய்­க­றி­கள் மற்­றும் பழங்­கள் நாச­மா­கின.

இதன் விளை­வாக காய்­க­றி­கள், பழங்­க­ளின் விலை வெகு­வாக அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

புய­லால் மிகக் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட இடங்­களில் ஒன்­றான ஹாக்ஸ் பேயில் இரண்டு தற்­கா­லிகப் பிண அறை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

மின்­சார இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தால் கிட்­டத்­தட்ட 62,000 வீடு­களில் இருப்­ப­வர்­கள் கடும் சிர­மத்­துக்கு ஆளா­கி­

இ­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மீட்­புப் பணி­களில் உதவ ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த நிபு­ணத்­து­வக் குழு ஒன்று வந்திருப்பதாக நியூ­சி­லாந்­துப் பிர­த­மர் ஹிப்­கின்ஸ் தெரி­வித்­தார். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் இல்­லா­மல் தவிப்­போ­ருக்கு நிவா­ர­ணம் அளிக்­கும் நோக்­கு­டன் அப்­ப­கு­தி­க­ளுக்கு லாரி­கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

நியூ­சி­லாந்­தின் கிழக்­குக் கடற்­ப­கு­தி­யில் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் இருப்­ப­வர்­க­ளுக்கு கப்­பல், விமா­னங்­கள் மூலம் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை நியூ­சி­லாந்து ராணு­வம் அனுப்­பு­கிறது.

ஹாக்ஸ் பேயில் உள்ள கிரா­மப் பகு­தி­களில் இருக்­கும் மக்­க­ளின் நிலை­யைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு உதவ ஹெலி­காப்­டர், பட­கு­கள் மூலம் மீட்­புப் பணி­யா­ளர்­கள் அங்கு சென்­றுள்­ள­னர்.