விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
b9fe789e-271f-4d5d-996c-2d136f6efc40
-

அர்டெட்டா: பட்டம் வெல்ல முனைப்புடன் உள்ளோம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் இன்று ஆர்சனலும் ஆஸ்டன் வில்லாவும் மோதுகின்றன. இந்நிலையில், இப்பருவத்தில் லீக் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் தமது ஆட்டக்காரர்கள் இருப்பதாக ஆர்சனலின் நிர்வாகி மிக்கேல் அர்டெட்டா தெரிவித்தார்.

தற்போது லீக் பட்டியலில் ஆர்சனலும் சிட்டியும் தலா 51 புள்ளிகளுடன் உள்ளன. கோல் வித்தியாசத்தில் சிட்டி முன்னிலை வகிக்கிறது. ஆர்சனல் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிட்டியை எப்படியாவது ஓரங்கட்டி முதலிடம் பிடித்து லீக் பட்டத்தை வெல்லும் வேட்கை தமது அணிக்கு அதிகம் இருப்பதாகவும் இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை அதிகம் இருப்பதாகவும் அர்டெட்டா தெரிவித்தார்.

சிங்கப்பூர் பிரிமியர் லீக்கில் முதலீடு செய்ய அழைப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியைப் புதுப்பிக்க சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் மிகுந்த முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் முதலீடு செய்ய வெளிநாட்டு அமைப்புகளையும் நிறுவனங்களையும் அது வரவேற்றுள்ளது. சிங்கப்பூரின் காற்பந்துத் தரத்தை உயர்த்த தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக சங்கத்தின் தற்காலிகத் தலைவர் பெர்னட் டான் கூறினார்.

மான்செஸ்டர் யுனைடெட்டை வாங்க விழையும் சவூதி அரேபியா

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஜாம்பவனான மான்செஸ்டர் யுனைடெட்டை வாங்கும் முயற்சியில் சவூதி அரேபியா இறங்கியுள்ளது. யுனைடெட்டை வாங்குவது குறித்து சவூதி தலைநகர் ரியாத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் விசாரித்து தேவையான விவரங்களைப் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இந்தத் தகவலை பிரிட்டிஷ் நாளிதழான தி டெலிகிராஃப் வெளியிட்டுள்ளது.

மேன்யூ- பார்சிலோனா சமநிலை

பார்சிலோனா: ஐரோப்பா லீக் 'பிளே ஆஃப்' காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் பார்சிலோனாவும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன.

ஆட்டத்தில் பார்சிலோனாவின் ஜூல்ஸ் கௌடே மூர்க்கத்தனமாக விளையாடியதாகவும் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டியிருக்க வேண்டும் என்றும் யுனைடெட்டின் நிர்வாகி டென் ஹாக் குறைகூறினார்.