ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் யாரும் எதிர்பாராத சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது.
அங்கு உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த குமாரி நஷாலி அல்மாவை ஆடவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
வாட்டசாட்டமான உடல்வாகு கொண்ட அந்த 25 வயது சேவியர் தாமஸ் ஜோன்சுடன் அந்த இளம் பெண் கடுமையாகப் போராடி, அவரை அடித்து விரட்டித் தப்பிக்கும் காட்சிகளை உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு செய்தது.
இந்தக் காணொளிக் காட்சி அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
உடற்பயிற்சிக் கூடத்தின் கதவுக்கு வெளியே சேவியர் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அவர் அங்கு உடற்பயிற்சி செய்ய வந்ததாகக் கருதி அவரை குமாரி அல்மா உள்ளே அனு
மதித்தார். அவ்விடத்தில் அவர் முன்பு உடற்பயிற்சி செய்திருப்
பதைப் பார்த்திருப்பதாக குமாரி அல்மா கூறினார்.
ஆனால் உள்ளே நுழைந்ததும் தம்மை விரட்டி, மடக்கிப் பிடிக்க முயன்ற சேவியருடன் அவர் போராடினார். அதே சமயத்தில் கைப்பேசி மூலம் உதவி கேட்டு அழைக்க முயன்றார்.
நினைத்தது நிறைவேறாமல் போக, அடி மேல் அடி வாங்கி சோர்வடைந்து உடற்பயிற்சிக்
கூடத்தைவிட்டு சேவியர் தப்பி ஓடினார். சேவியரை ஹில்பரோ கவுன்ட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

