பெர்லின்: ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட், மியூனிக் விமான நிலையங்கள் உட்பட ஏழு விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்த விமான நிலையங்கள் முடங்கின. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட 300,000 பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தொழிற்சங்கங்களில் உறுப்
பினர்களாக இருக்கும் ஊழியர்கள், கூடுதல் சம்பளம் கேட்டு குரல் எழுப்பியுள்ளனர். முன்வைக்கப்படும் கோரிக்கை நிறைவேறாவிடில் வரும் கோடைக்காலத்தில் விமான நிலையம் முற்றிலும் முடங்கிவிடும் என்று அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கோடைக்காலத்தின்போது ஜெர்மனி மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலர் குளிர் பிரதேசங்களுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நேற்று மியூனிக் பாதுகாப்பு மாநாடு தொடங்கியது. அதில் 40க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களும் 60 அமைச்சர்களும் கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒரு சூழலில் வேலை
நிறுத்தப் போராட்டத்தை நடத்தினால் அதிக தாக்கம் இருக்கும் என்று கருதி ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஜெர்மன் விமான நிலையத்தில் நிகழும் வேலை நிறுத்தம் காரணமாக மாநாட்டில் கலந்துகொள்ள இருந்த ருமேனிய வெளியுறவு அமைச்சர் பயணம் செய்ய இருந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.