பேங்காக்: தாய்லாந்து நாடாளு
மன்றத்தை வரும் மார்ச் மாதத்துக்குள் அந்நாட்டுப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா கலைக்க வேண்டும்.
அதையடுத்து, தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும். இருப்பினும், நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதைக் கூற திரு பிரயுத் அறிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் எதிர்பார்க்கப்பட்டதைவிட நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
தாய்லாந்தின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட கால அளவுக்கு ஏற்ப அடுத்த பொதுத் தேர்தலை மே மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

