நிலநடுக்கத்திலிருந்து உயிர்தப்பி தீயில் கருகி மாண்ட சிரியா குடும்பம்

நிலநடுக்கத்திலிருந்து உயிர்தப்பி தீயில் கருகி மாண்ட சிரியா குடும்பம்

1 mins read
58fe3c80-2bde-49bb-8b14-8191b851e45d
-

இஸ்­தான்­புல்: துருக்­கி­யை­யும் சிரி­யா­வை­யும் கடந்த வாரம் புரட்­டிப்­போட்ட மிக மோச­மான நில­ந­டுக்­கத்­தி­லி­ருந்து உயிர்­தப்­பிய சிரியா குடும்­பம் நேற்று மர­ணத்­தின் பிடி­யில் சிக்­கி­யது.

நில­ந­டுக்­கத்­தி­லி­ருந்து தப்­பிய பிறகு அக்­கு­டும்­பம் துருக்­கி­யில் ஓர் அடுக்­கு­மாடி வீட்­டில் வசித்து வந்­த­னர். இந்­நி­லை­யில் அந்த வீட்­டில் நேற்று தீ மூண்­டது.

இதில் ஐந்து குழந்­தை­களும் அவர்­க­ளது பெற்­றோ­ரும் மாண்­ட­னர். மாண்ட குழந்­தை­கள் நான்கு வய­துக்­கும் 13 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

"அந்த வீடு கொழுந்­து­விட்டு எரிந்­த­தைப் பார்த்­தோம். சன்­னல் வழி­யாகச் சிறுமி ஒரு­வர் காப்­பாற்­றப்­ப­டு­வ­தைக் கண்­டோம்," என்று அதே குடி­யி­ருப்­பில் வசிக்­கும் ஒரு­வர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். காப்­பாற்­றப்­பட்ட சிறுமி தீயில் கருகி மாண்ட குடும்­பத்­தைச் சேர்ந்­த­வரா என்­பது இன்­னும் தெரி­ய­வில்லை.

துருக்கியில் ஏறத்தாழ நான்கு மில்லியன் சிரியா மக்கள் வாழ்வதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.