ஜகார்த்தா: பாதுகாப்பு குறித்து கவலை எழுந்ததால் இந்தோனீசிய லீக் காற்பந்துப் போட்டி காற்பந்தாட்டம் ஒன்றுக்கு ரசிகர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பிஎஸ்ஐஎஸ் செமாராங் குழுவுக்கும் பெர்சிஸ் சோலோ குழுக்கும் இடையிலான ஆட்டத்தைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
ஆனால் அவர்களை விளையாட்டரங்கிற்குள் அதிகாரிகள் நுழையவிடவில்லை.
இந்நிலையில், ரசிகர்களை விரட்டியடிக்க இந்தோனீசியக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகையையும் நீரையும் பீய்ச்சி அடித்தனர்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு இந்தோனீசியக் காற்பந்து விளையாட்டரங்கில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் ஏறத்தாழ 135 பேர் மாண்டனர்.

