துருக்கி: கானா காற்பந்து வீரரின் உடல் மீட்பு

துருக்கி: கானா காற்பந்து வீரரின் உடல் மீட்பு

1 mins read
a7de0676-edee-4e5c-9a55-8979dedd903b
-

ஹத்தே: துருக்கி நில­ந­டுக்­கத்­தின் இடி­பா­டு­களில் இருந்து கானா காற்­பந்து வீரரும் செல்சிக் குழுவின் முன்னாள் வீரருமான கிறிஸ்­டி­யன் அட்­சு­வின் உடல் மீட்­கப்­பட்­டது.

கடந்த 6ஆம் தேதி துருக்­கி­யி­லும் சிரி­யா­வி­லும் 7.8 ரிக்­டர் அள­வில் ஏற்­பட்ட நில­ந­டுக்­கத்­திற்கு கிட்டத்தட்ட 44,000 போ் மாண்­டு­விட்­ட­னர்.

31 வயதான அட்­சு­வின் உடல் அடுத்த நாளே மீட்­கப்­பட்­ட­தாக முத­லில் கூறப்­பட்­டது. பின்­னர் அது உண்­மை­யல்ல என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அட்­சு­வின் உட­லும் அவ­ரது கைபே­சி­யும் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் அவ­ரது மற்ற உடை­மை­கள் கிடைக்­க­வில்லை என்­றும் அட்­சு­வின் மேலா­ளர் சொன்­னார்.

செல்­சி­யின் மத்­திய திடல் வீர­ராக நான்கு பரு­வங்­களும் பின்­னர் நியூ­கா­ச­லுக்­கா­க­வும் விளை­யா­டிய அட்சு, சென்ற செப்­டம்­பர் மாதம் துருக்­கி­யின் ஹத்­தேஸ்­போர் காற்­பந்­துக் குழு­விற்­காக விளை­யாடி வந்­தார்.

12 நாள்களுக்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்பு

துருக்­கி­யில் சக்­தி­வாய்ந்த நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட 11 நாள்­க­ளுக்­குப் பிறகு, மிக­வும் அதி­ச­யக்­கத்­தக்க வகை­யில் 3 போ் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

நில­ந­டுக்­கம் ஏற்­பட்ட 260 மணி நேரத்­துக்­குப் பிறகு, உஸ்­மான் என்ற 14 வயது சிறு­வனை மீட்­புக் குழு­வினா் உயி­ரு­டன் மீட்­டனா்.

கட்­டட இடி­பா­டு­க­ளுக்கு உள்­ளி­ருந்து வந்த சத்­தத்­தைக் கேட்டு அந்த சிறு­வனை குழு­வினா் மீட்­டனா் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­தனா்.

அதனைத் தொடா்ந்து 26 வயது, 33 வயது கொண்ட இரண்டு இளைஞா்களும் கட்டட இடிபாடுகளிலிருந்து அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனா்.