பாகிஸ்தானைத் தாக்குவோம்: தலிபான் எச்சரிக்கை

பாகிஸ்தானைத் தாக்குவோம்: தலிபான் எச்சரிக்கை

1 mins read
278fa947-1dcc-4d4b-976d-cb13bab1aba9
-

கராச்சி: பாகிஸ்­தா­னில் தொடர்ந்து தாக்­கு­தல் நடத்­தப்­படும் என்று தலி­பான் அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

பாகிஸ்­தா­னின் கராச்சி நக­ரில் காவல்­துறை தலைமை அலு­வ­ல­கத்­தில் புகுந்து தீவி­ர­வா­தி­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தில் 2 காவல்­து­றை­யி­னர் உள்­பட 4 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

காவல்­து­றை­யி­ன­ரின் சீரு­டை­யில் பயங்­கர ஆயு­தங்­க­ளு­டன் 8 தீவி­ர­வா­தி­கள் திடீ­ரென உள்ளே புகுந்­தனர்.

காவல்­து­றை­யி­ன­ரைத் துப்­பாக்கி முனை­யில் சர­ண­டைய வைத்து மொத்த காவல் தலைமை அலு­வ­ல­கத்­தை­யும் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முயன்­ற­னர்.

அப்­போது நடத்­தப்­பட்ட எதிர் தாக்­கு­த­லில் 2 தீவி­ர­வா­தி­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். 3 தீவி­ர­வா­தி­கள் தங்­கள் உட­லில் கட்­டி­யி­ருந்த குண்­டு­களை வெடிக்க செய்து உடல் சிதறி பலி­யா­கி­னர்.

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததில் காவல் அதிகாரிகள் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு காவல் தலைமை அலுவலகம் மீண்டும் காவல்துறையின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது.