சோல்: வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் கூறுகிறது.
வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு கடலில் ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அது சொன்னது. ஏழு வாரங்களில் முதல்முறையாக வடகொரியா மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளது.
தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கவுள்ள நிலையில், வடகொரியா ஏவுகணையை பாய்ச்சியுள்ளது.

