'ஒத்துழைப்பேன், மறைக்க ஒன்றும் இல்லை'

'ஒத்துழைப்பேன், மறைக்க ஒன்றும் இல்லை'

2 mins read
bd2132ed-e65c-411e-95da-19de312e6cf1
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யப் பிர­த­ம­ராக திரு முகை­தீன் பதவி வகித்­த­போது ஊழ­லில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கப்­பட்டு தம்­மீது மலே­சிய ஊழல் தடுப்பு ஆணை­யம் விசா­ரணை நடத்­தி­னால், முழு ஒத்­து­ழைப்பு தர தயா­ராக இருப்­ப­தாக அந்­நாட்­டின் தற்­போ­தைய அனைத்­து­லக வர்த்­தக, தொழில் அமைச்­சர் துங்கு ஸஃப்ருல் துங்கு அப்­துல் அசிஸ் தெரி­வித்­துள்­ளார்.

அதி­கா­ரி­க­ளி­டம் மறைப்­ப­தற்­குத் தம்­மி­டம் எது­வும் இல்லை என்று சமூக வலைத்­த­ளத்­தில் திரு ஸஃப்­ருல் தெரி­வித்­தார். திரு முகை­தீ­னின் ஆட்­சி­யின்­போது திரு ஸஃப்ருல் நிதி அமைச்­ச­ராக இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

"ஜனா விபாவா திட்­டம் பற்றி செய்­தி­யா­ளர்­கள் என்­னி­டம் கேள்வி எழுப்­பி­னர். அது­கு­றித்து மறைப்­ப­தற்கு என்­னி­டம் எது­வும் இல்லை. என்­னி­டம் அது பற்றி விசா­ரணை நடத்­தி­னால் விளக்­கம் அளிக்கத் தயா­ராக இருக்­கி­றேன்," என்று திரு ஸஃப்ருல் கூறி­னார்.

ஜனா விபாவா திட்­டம் மூலம் ஊழல் நடந்­தி­ருப்­ப­தாக பேச்சு நில­வு­கிறது.

இது­தொ­டர்­பாக, சாட்சி என்ற அடிப்­ப­டை­யில் ஆணை­யம் தம்மை அழைத்து விசா­ரித்­த­தாக திரு முகை­தீன் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

ஜனா விபாவா திட்­டத்தை திரு ஸஃப்­ருல்­தான் பரிந்­து­ரைத்­த­தாக திரு முகை­தீன் கூறி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்ட பூமி­புத்­தி­ரர்­க­ளுக்கு உதவ இத்­திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இத்­திட்­டத்­தி­லி­ருந்து பில்­லி­யன் கணக்­கான ரிங்­கிட் கையா­டல் செய்யப்பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

"நிறு­வ­னங்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­க­வும் ஒப்­பு­தல் வழங்­க­வும் நிதி அமைச்­சுக்­குத்­தான் அதி­கா­ரம் உள்­ளது என்­பதை ஆணை­யத்­தி­டம் தெரி­வித்­தேன்.

"திட்­டத்­தில் பங்­கெ­டுக்­கும் நிறு­வ­னங்­கள் குறித்து பிர­த­மர் அலு­வ­ல­கத்­தால் பரிந்­துரை

மட்­டுமே செய்ய முடி­யும்," என்று திரு முகை­தீன் தெரி­வித்­தார்.

ஜனா விபாவா திட்­டத்­தின்­கீழ் 5.7 பில்­லி­யன் ரிங்­கிட் (S$1.7 பில்­லி­யன்) பெறு­மா­ன­முள்ள கிரா­மப்­புற மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக மலே­சி­யா­வின் கிராம, வட்­டார மேம்­பாட்டு அமைச்­சர் அக­மது ஸாஹிட் ஹமிடி கடந்த புதன்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தார்.