நெப்போலியனுக்கு நடந்ததை மறந்துவிடாதீர்; மெக்ரோனுக்கு நினைவூட்டிய புட்டின்

நெப்போலியனுக்கு நடந்ததை மறந்துவிடாதீர்; மெக்ரோனுக்கு நினைவூட்டிய புட்டின்

1 mins read
59234151-8719-4e1f-9aa7-9f2866903726
-

மாஸ்கோ: உக்­ரே­னுக்கு எதி­ரான போரில் ரஷ்யா தோற்க வேண்­டும் என்­பதே பிரான்­சின் விருப்­பம் என்று பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வல் மெக்­ரோன் அண்­மை­யில் அந்­நாட்டு நாளி­த­ழுக்கு அளித்த பேட்­டி­யில் தெரி­வித்­தி­ருந்­தார். இதற்கு ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கடும் அதி­ருப்தி தெரி­வித்து அதி­பர் மெக்­ரோ­னைச் சாடி­யுள்­ளார்.

பல நூறாண்­டு­க­ளுக்கு முன்பு ரஷ்­யா­வுக்கு எதி­ரா­கப் போர் தொடுத்த பிரெஞ்­சுத் தலை­வர் நெப்­போ­லி­ய­னுக்கு ஏற்­பட்ட கதியை திரு புட்­டின் நினை­வுப்­

ப­டுத்­தி­னார்.

அப்­போ­ரில் நெப்­போ­லி­ய­னுக்கு மீள­மு­டி­யாத தோல்வி ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில், ரஷ்­யா­வில் தலை­மைத்­துவ மாற்­றம் கொண்டு வர வேண்­டும் என்று மேற்­கத்­திய நாடு­கள் ஒன்­றி­ணைந்து முடி­வெ­டுத்­தி­ருப்­பது ரஷ்­யா­வுக்­குத் தெரி­யும் என்று ரஷ்ய வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித்

தொடர்­பா­ளர் மரியா ஸக்­க­ரோவா தெரி­வித்­தார்.

ஆனால் அதி­பர் புட்­டினின் ஆட்­சி­யைக் கவிழ்ப்­பது குறித்து திரு மெக்­ரோன் பேச­வில்லை.

மாறாக, அவ­ரைச் சந்­தித்­துப் பேசி போரை முடி­வுக்­குக் கொண்டு வர வேண்­டும் என்­பதே அவ­ரது நிலைப்­பாடு.

இத­னால் மேற்­கத்­திய நாடு­களும் அவர் மீது அதி­ருப்தி அடைந்­துள்­ளன.