வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு (படம்) அவரது வீட்டிலேயே அந்திமகாலப் பராமரிப்பு அளிக்கப்
படுகிறது. அவருக்கு 98 வயது.
எஞ்சியிருக்கும் நாள்களை அவர் தமது வீட்டிலேயே கழிப்பார் என்று அவர் தொடங்கிவைத்த லாபநோக்கமற்ற அமைப்பு நேற்று முன்தினம் கூறியது.
திரு கார்ட்டர் 1977ஆம் ஆண்டிலிருந்து 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார்.
வீட்டில் அந்திமகாலப் பராமரிப்பு பெறுவதற்கு முன்பு திரு கார்ட்டர் தொடர்ந்து பலமுறை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இனி அவரது இறுதி காலத்தில் குடும்பத்தினருடன் இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு கார்ட்டர் ஜியார்ஜியா மாநிலத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.