மணிலா: மத்திய பிலிப்பீன்சில் சிறிய விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
விழுந்து நொறுங்கிய விமானத்தையும் அதில் இருந்த நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருப்பதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை, தேடுதல் பணியைப் பாதித்துள்ளது.
இதனால் விமானம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உடைந்த விமானப் பாகங்கள் மாயோன் எரிமலை அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மேலும் மாயோன் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

