கோலா திரங்கானு: மலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் பாஸ் கட்சியின் இளையர் அணி நடத்திய அணுவகுப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அம்மாநில காவல்துறை விசாரணை நடத்துகிறது.
பழங்கால இஸ்லாமியப் போராளிகளைப் போல ஆடைகள் அணிந்துகொண்டும் போலி ஆயுதங்களை ஏந்திக்கொண்டும் பாஸ் கட்சியின் இளையர் அணியினர் அணிவகுத்துச் சென்றதாக திரங்கானு காவல்துறை கூறியது.
இந்த அணிவகுப்பைக்
காட்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. பாஸ் இளையர் அணியின் இச்செயல் நாட்டில் உள்ள சில பிரிவினரைக் கவலை அடையச் செய்துள்ளதாக திரங்கானு காவல்துறைத் தலைவர் ரொஹாய்மி முகம்மது இஸா தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் தகுந்த நட
வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இந்த சர்ச்சை அணிவகுப்பு திரங்கானுவில் உள்ள செட்டியூ உல்லாச விடுதியில் நடை
பெற்றதாக திரு ரொஹாய்மி கூறினார். தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் பாஸ் கட்சியின் இளையர் அணி அங்கு இரண்டு நாள் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அந்நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த அணி
வகுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

