விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

1 mins read
ba28d7ca-1093-4a32-b3ad-f2afaefe09d0
-

ஆர்சனல் வெற்றி; சிட்டி சமநிலை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை 4-2 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது.

மற்றோர் ஆட்டத்தில் நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவுடன் மான்செஸ்டர் சிட்டி 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

இதன்மூலம் 54 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ஆர்சனல் முன்னிலை வகிக்கிறது. 52 புள்ளிகளுடன் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது.

வெறும் பத்து பேருடன் விளையாடி லிவர்பூலிடம் தோற்ற நியூகாசல்

நியூகாசல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லிவர்பூலிடம் 2-0 எனும் கோல் கணக்கில் நியூகாசல் அதன் சொந்த விளையாட்டரங்கமான செயிண்ட் ஜேம்சஸ் பார்க்கில் தோல்வி அடைந்தது. இதற்கு முன்பு தொடர்ச்சியாக 17 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த நியூகாசலின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் நியூகாசலின் கோல்காப்பாளர் நிக் போப்பிற்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதையடுத்து, வெறும் பத்து ஆட்டக்காரர்களுடன் நியூகாசல் விளையாடியது. லீக் பட்டியலில் நியூகாசல் நான்காவது இடத்திலும் லிவர்பூல் எட்டாவது இடத்திலும் உள்ளன.

பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்ட இந்தியா