தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொரியத் தீபகற்பம் பற்றி எரியும்; வடகொரியா எச்சரிக்கை

1 mins read
3fc53574-c68b-4669-835b-e6a32a603726
-

சோல்: வடகொரியா அதன் கிழக்குக் கடலோரப் பகுதியிலிருந்து மேலும் இரண்டு ஏவுகணைகளை நேற்று பாய்ச்சியது.

வடகொரியாவைத் தூண்டும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து நடந்துகொண்டால் கொரியத் தீபகற்பம் பற்றி எரியும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை ஒன்றை வடகொரியா பாய்ச்சியது.

அந்த ஏவுகணை ஜப்பானின் மேற்குக் கடற்பகுதிக்குள் விழுந்தது. அதையடுத்து, நேற்று முன்தினம் தென்கொரிய ஆகாயப் படையுடன் அமெரிக்கா இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. அதே நாளன்று ஜப்பானிய படைகளுடனும் அமெரிக்கப் படைகள் வேறோர் இடத்தில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டன. இவை வடகொரியா வைச் சினமடையச் செய்துள்ளன.

நேற்று இரண்டு ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டதை வட­கொ­ரிய அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான ஊட­கம் உறுதி செய்து காணொ­ளி­களை வெளி­யிட்­டது.

395 கிலோ­மீட்­டர், 337 கிலோ­மீட்­டர் தூரம் உள்ள இலக்­கு­

க­ளைக் குறி­வைத்து ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­ட­தா­கத் தெரி­வி­க்கப் பட்­டது.

இந்த ஏவு­க­ணை­கள் தனது பிரத்­தி­­யே­கப் பொரு­ளி­யல் மண்­ட­லத்­துக்கு வெளியே கட­லில் விழுந்­த­தாக ஜப்­பா­னின் தற்­காப்பு அமைச்சு நேற்று கூறி­யது. ஏவு­

க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டது குறித்து அவ­ச­ர­கா­லக் கூட்­டம் ஒன்றை ஐநா பாது­காப்பு மன்றம் உட­ன­டி­யா­கக் கூட்ட வேண்­டும் என்று ஜப்­பானியப் பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா கோரிக்கை விடுத்­துள்­ளார்.