லாகூர்: முன்னாள் பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் இப்போதைக்குக் கைதுசெய்யப்படாமல் இருக்க வகைசெய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லாகூர் நகர நீதிமன்றம் ஒன்று திரு இம்ரானுக்குப் பாதுகாப்புப் பிணை உத்தரவை அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின்கீழ் திரு இம்ரான்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இரண்டு வாரங்களுக்குக் கைது செய்யப்படமாட்டார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்த திரு கான் பிரதமர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. அதையடுத்து அவர்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தனது அரசியல் கட்சிக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டியது, அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது உள்ளிட்டவற்றின் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

